மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையில் கர்நாடகாவிற்கு உதவிய கோவை ஓசை தன்னார்வ அமைப்பினர்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை தன்னார்வ அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களை வேருடன் இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் சேவை அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



இந்நிலையில், கர்நாடகாவில் சாலை விரிவாக்கப்பணிக்காக அப்பகுதியில் இருந்த 500 மரங்கள் வெட்ட வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பத்திரிகைசெய்திகள் வாயிலாக ஓசை அமைப்பின் மரங்களுக்கு மறுவாழ்வு குறித்த தகவல் அறிந்த கர்நாடக வனத்துறையினர் ஓசை அமைப்பின் சையது அவர்களை தொடர்புகொண்டு மரத்தினை இடமாற்றம் செய்வது குறித்து உதவிகோரியுள்ளது.



இதுகுறித்து ஓசை சையது நமது சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:- சாலை விரிவாக்கப் பணிக்காக கர்நாடகாவில் ஹூப்லி முதல் ஹசக் வரையிலான சாலையில் இருந்த 500 மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய கர்நாடக வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாத், தமிழகத்தில் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினை தொடர்புகொண்டு உதவிகோரினார். இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவிற்கு சென்ற எனது தலைமையிலான ஓசை தன்னார்வ குழுவினர் மரங்களை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முடிவுசெய்தோம். அங்கு நமது பாரம்பரிய மண்ணின் மரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான மாற்று இடங்களையும், மரங்களை வேருடன் அகற்றி எடுத்துச் செல்ல தேவையான அனைத்து வாகன வசதி மற்றும் ஊழியர்களையும் கர்நாடக அரசே வழங்கியது. இதில் வியக்கத்தக்க விசயம் என்னவென்றால், வழக்கமாக மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வேருடன் கூடிய மரத்தின் முக்கியப்பகுதி மட்டுமே இடமாற்றம் செய்யப்படும். ஆனால், கர்நாடக அரசு முழு மரங்களையும் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியது. அதன்படியே, தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.



எங்களுடன் இணைந்து அம்மாநில வனத்துறையினரும் மரங்களை அகற்ற உதவினர். ஒவ்வொரு மரங்கள் வேருடன் இடமாற்றம் செய்யும் போது அம்மாநில அமைச்சர் நேரில் வந்து பணிகள் குறித்து ஆய்வு செய்து ஓசை அமைப்பினர் மற்றும் வனத்துறையினரை ஊக்குவித்தார். மேலும், ஐந்தாவது மரம் இடமாற்றம் செய்யும் போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா நேரில் வந்து பார்வையிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 



மேலும், அங்குள்ள பயிற்சி வனத்துறையினர்களுக்கும் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வேருடன் இடமாற்றம் செய்வது குறித்தான பயிற்சிகள் ஓசை தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு ஓசை சையது கூறினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...