ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்க்கு அரசு கட்டணத்தில் சிறந்த பள்ளிகளில் சேர்க்கை- கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு அரசு கட்டணத்தில் சிறந்த பள்ளிகளில் பயில பள்ளிச்சேர்க்கைக்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (மே 6) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் 287 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஆதி திராவிட நலத்துறையின் மூலமாக 17 ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு அரசு கட்டணத்தில் சிறந்த பள்ளிகளில் பயில பள்ளிச்சேர்க்கைக்கான உத்தரவினை 7 மாணவ மாணவியருக்கு 7-ஆம் வகுப்பு பயிலுவதற்கும், 10 மாணவ மாணவியருக்கு 12- ஆம் வகுப்பு பயிலுவதற்கும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆதி திராவிட நல அலுவலர் மோகன் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...