ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மத்திய அரசு ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது, பன்மடங்கு வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டு வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் செயலாகவே அமைகிறது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறு தொழில் வணிக நிறுவனங்களை பாதிக்காதவாறு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தியும், மாணவர்களை பாதிக்கும் போதை தரும் மாத்திரை, பெண்களின் சிசு கருச்சிதைவு போன்ற மருந்துக்களை தடைசெய்யக் கோரியும், உயிர்காக்கும் மருந்துக்களை குறைந்த விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவும், மத்திய மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் சுங்கவரியை குறைக்கவும், கோவை திருப்பூர் மையமாக செயல்படும் கணியூர் சுங்கசாவடியில் இருந்து 30 கிலோமீட்டர் வரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட பொருளாளர் பொன்.தங்கமரியப்பன் மற்றும் வணிகர் நலமுன்னேற்ற சங்கம், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.