கோவையில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிதி உதவி.

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென வெளியேரிய காட்டு யானை போத்தனூர் அருகே 4 பேரை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், யானை தாக்குதலால் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள யானையைக் காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் கும்கி யானைகளில் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். தொடர்ந்து, அதனை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, தற்போது கோவை போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 16 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதில் யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் குடும்பத்திற்கு ரூ.59 ஆயிரத்து 100 ரூபாய் வீதம் 11 லட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...