தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி கொடியசைத்து 11 ஜீப்களை 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாட்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் பாலமாக இருந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பங்களை மதிப்பீடு செய்தல், மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முதல் நிலை செயல்விளக்கங்கள் மூலம் புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரவலாக்கம் செய்தலை முதன்மைக் குறிக்கோள்களாக கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள 30 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் வேலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆற்றிய சாதனைகளுக்காக “சிறந்த மண்டல வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கான விருதை” பெற்றுள்ளது.
மேலும், கடலூர் வேளாண் அறிவியல் நிலையம் தேசிய அளவில் சிறந்த பயறுவகை பயிர்களுக்கான கூட்டு முதல்நிலை செயல் விளக்கத்திடலுக்கான விருதை பெற்றுள்ளது.
உழவர் பெருமக்களின் நன்மைக்காக விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு ரூபாய் 92 லட்சம் செலவில் 11 பொலிரோ ஜீப்களை வாங்கியுள்ளது.
இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கொடியசைத்து வைத்து, வாகனங்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
முனைவர் ஹெ. பிலிப், விரிவாக்கக் கல்வி இயக்குநர், பொறியாளர் எஸ். செந்தில் குமார், வளாக அலுவலர், பல்கலைக்கழக இயக்குநர்கள் மற்றும் துறை தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.