கோவை மாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.


மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க  தவறிய கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக கூறி முழக்கங்கள் எழுப்பட்டது.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி கூறியதாவது:- கடந்த  திமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கண்டது. தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலை மாறிவிட்டது.

கடந்த 6 மாத காலமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக மாறி இருக்கிறது. சாலைகள் சரி செய்யப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் 24 நாட்களுக்கு ஓரு முறை மட்டுமே மக்களுக்கு  தண்ணீர் வழங்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. தெரு விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. 

மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக அதிமுக உள்ளது. அவர்கள் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் வரை திமுக தொடர் போராட்டம் நடத்தும்" இவ்வாறு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...