நீலகிரி ஆதிவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆதிவாசி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையினை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியினர் 50-க்கும மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கரிடம் மனு அளித்தனர்.

மேலும், இப்பகுதியில் செயல்படும் இந்த டாஸ்மாக் மதுப்பான கடையால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றார். இக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று கூடி இப்பகுதியில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக பாடந்துரை பகுதீயில் டாம்க் கடை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மண்ணரசன் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...