ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு

விசைத்தறி தொழிலுக்கு 2014-யில் ஆன ஒப்பந்த கூலியை கேட்டு நடைபெற்ற விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதியன்று மாவட் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுக்க வேண்டும் என்றும், இனி எக்காரணம் கொண்டும் ஒப்பந்த கூலியை குறைக்ககூடாது என்றும் ஒப்பந்த கூலியை குறைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், நான்கு வாரகாலம் கடந்தும் ஓரிரு ஜவுளி உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. 

இதேபோல், 2014-யில் ஒப்பந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கியதால் பலகட்ட போராட்டங்களுக்கும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் பின் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த ஒப்பந்த கூலியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு 22.2.2016-யில் கோவை, திரப்பூர் மாவட்ட அமைச்சர்கள், இரண்டு மாவட்ட ஆட்சியர்களால் அவிக்கப்பட்டது.

ஆனால், ஒருசில மாதம் மட்டம் கொடுத்துவிட்டு ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கியதால் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடியும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்த கூலி உயர்வு வழங்காமல் செயல்பட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய கூலியை கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...