சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 11 லட்சம் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 15 ஆயிரத்து 450 பேர் தேர்வில் பங்கேற்றனர். வினாத்தாள் கடினமாக இருந்தால் கருணை மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்கி வருவது நடைமுறை. அதன்படி இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் அப்பாடத்திற்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. ஆனால் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சி.பி.எஸ்.இ) இம்முடிவுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடியாக தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி கருணை மதிப்பெண் இன்றி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை திடீரென ரத்து செய்யக் கூடாது என்று கூறி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையால் தள்ளிப்போன சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...