நகர்ப்பகுதியை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல, சிஎம்சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் தயக்கம்

சி.எம்.சி., காலனிக்கு பின்புறம், சிட்டி மாநகராட்சி பள்ளிக்கான மைதானம் உள்ளது. அதன் ஓரத்தை ஆக்கிரமித்து, 400 குடும்பங்கள் ஓட்டு வீடு அமைத்து, குடியிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். இப்பகுதிக்கு பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. உப்புத்தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், வீட்டுக்கு முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. மின் வசதி இல்லாததால், அருகில் உள்ள சி.எம்.சி., காலனியில் தற்காலிக இணைப்பு பெற்று, தற்போது பயன்படுத்துகின்றனர். 



இப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனை சந்தித்து, 'மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்' எனக்கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு ரூபாய் 377 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்; 'சி.எம்.சி., காலனி மைதானத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். போதிய அடிப்படை வசதியில்லை. காலனியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறோம். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் கல்வி பாதிக்கிறது. புதிதாக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும்' என மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை' என்றும் மாறாக, வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இடம் பெயருமாறும் கூறினார். 

இங்கு வசிக்கும் பெரும்பாலனோர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை 5 மணியளவில் பணிக்கு செல்லவேண்டும். இதனால் வெள்ளலூர் பகுதியில் இருந்து வர பேருந்து வசதி கிடையாது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இங்கு உள்ளவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். எனவே கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களுக்கு சிஎம்சி காலனி மைதானத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டவும், சி.எம்.சி., காலனி குடியிருப்பை செப்பனிட மதிப்பீடு தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை. நகர்ப்பகுதியை விட்டு, அங்கு இடம் பெயர்ந்து செல்ல, துப்புரவு தொழிலாளர்கள் தயங்குகின்றனர், என்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...