மழைவேண்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் இன்று (மே 22) மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழைபொழிவின்றி நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையங்கள்துறை சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறையின்படி, மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களில் மழைவேண்டி யாகம் நடத்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நந்தியை கழுத்தழவு தண்ணீரில் மூழ்கச்செய்தும், மழைவேண்டி கோவில் குருக்களால் தேவாரங்கள் மூலம் சிவனை வேண்டியும், கஜபூஜை நடத்தியும், தீர்த்த தண்ணீர்களை தெப்பக்குளத்தில் பூஜித்து ஊற்றியும் வருண பகவானை வேண்டினர்.



அதுபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களான அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோவில் தேக்கம்பட்டி, அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவில் அன்னூர் வட்டம், அருள்மிகு இராமலிங்கசாமி திருக்கோவில் இடுகம்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம், அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் கோட்டை கோவை நகர்வட்டம், அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், உப்பாரவீதி கோவை நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பனர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, உள்ளிட்டோரும், சமூக ஆர்வளர்களும், பொதுமக்களுமென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...