செங்குளத்தை சுத்தப்படுத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர்ந்து பதினைந்தாவது வார களப்பணியாக இந்த வாரம் ஞாயிறன்று காலை 7 மணியளவில் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த களப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டு  3 டன் அளவிலான பாலித்தீன் கழிவுகளும், கண்ணாடி பாட்டில்களையும் அகற்றினர்.



இதைத்தொடர்ந்து, செங்குளத்தில் களப்பணி முடிந்தவுடன் பேரூர் கோவிலுக்குச் சென்று அங்கு வடக்கு பிரகார சுவரில் இருந்த கல்வெட்டை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பார்வையிட்னர். அப்போது, அந்த கல்வெட்டு குறிப்புகளை கல்வெட்டியல் துறை ஆராய்ச்சி மாணவி சாந்தி விளக்கமளித்தார். அவருடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விஜய்-யும் கல்வெட்டு குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், அணைக்குள் பாலம் கட்டி நெடுஞ்சாலைத்துறையும், குப்பைக்கிடங்கு அமைத்து உள்ளாட்சித் துறையும் ஆக்கிரமித்துள்ளன. இந்த அணை தற்பொழுது பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ளது.



இந்த தடுப்பணையை தூர்வாரி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதென கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளில் கோரிக்கை மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்வெட்டில் குறிப்பிட்டிருந்த தேவிசிறை அணை அதாவது தற்போதைய கோவை தடுப்பணை பார்வையிடப்பட்டது. அங்கு தண்ணீர் சென்ற அளவு குறித்து 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் குறித்துவைத்துள்ள குறிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து சுண்டக்காமுத்தூரிர் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிணறு ஒன்றும் பார்வையிடப்பட்டது. அந்த கிணறு சிதிலமடைந்து குப்பைகளால் நிறைந்து காணப்படுவதைத் தொடர்ந்து, அந்த கிணற்றை தூர்வாரி வரலாற்று சின்னத்தை மீட்டெடுப்பது என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...