'ஜோக்கர்' திரைபடத்தின் நடிகர் குரு சோமசுந்தரத்தின் பிரத்யேக சிறப்பு பேட்டி!


இயக்குநர் ராஜு முருகனின் 'குக்கூ' என்ற தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்தார். அதனை தொடர்ந்து குரு சோமசுந்தரம் நடிப்பில் 'ஜோக்கர்' என்ற படத்தினை கொடுத்தார். மொழிவாரியாக சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் படம் தேர்வானது. இந்த படத்திற்கு 64வது தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  



ஜோக்கர் படத்தின் நடிகர் குரு சோமசுந்தரம் சிம்ப்ளிசிட்டியிடம் அளித்த சிறப்பு பேட்டியில் நம்மிடம் பகிந்து கொண்டவை:-  

ஒரு நல்ல படத்தை இயக்க முக்கிய காரணம் இயக்குநர் தான். நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக பத்து வருட காலமாக கூத்துப் பட்டறையில் நடித்து வந்தேன். அதனைத்தொடர்ந்து, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, ஆரண்ய காண்டம் போன்ற படங்களின் மூலம் சினிமா உலகிற்கு வந்தேன். மேலும், மலையால படங்களிலும் நடித்துள்ளேன். 

சினிமாவில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்களின் உணர்வுகளை உள்வாங்கி நடிக்க வேண்டும். திரைப்படக் கதைகள் மற்றும நடிப்பில் நல்லது, கெட்டது இருக்கும். கெட்ட செயல்களின் போது அது ஒரு நல்ல அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். மக்கள், நல்லதை எடுக்கொள்ள வேண்டும். கெட்டதை உணர வேண்டும்.

தெருக் கூத்தும், செய்திகளும் தான் மக்கள் உணர்வுகளை புரிந்து நல்ல, கெட்ட செயல்களை மக்கள் முன்பு எடுத்துச் செல்கிறது. முந்தைய காலங்களில் சினிமா என்பது மாகாபாரதம், இராமாயணம் ஆகிய கதைகளைக் கொண்டு மக்கள் பார்வைக்கு படமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சமுதாயக் கருத்துக்களும் அன்றைய காலகட்ட சினிமாவில் வளம் வந்தது. 

இன்று சினிமா என்பது பொருளாதாரரீதியாக மாறிவிட்டது. இயற்கை வளங்கள் எல்லாம் அழிந்து கெட்டுப்போய் விட்டது போல், சக மனிதர்களின் வாழ்கை சீரழிவையும், பெண்களின் வன்கொடுமைகளையும் சித்தரிக்கும் விதமாக மாறி விட்டது. இதன் மூலம் காதல் படம், பேய் படம் மற்றும் காமெடி படங்கள் அதிகம் வந்து கொண்டிருகிறது. சமூக பார்வையுடைய படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

என்னைப் பொருத்தவரையில், நானும் சமூக அக்கறை குறைவாக உடைய மனிதன் தான். ஆனால், ஜோக்கர் திரைப்படம் என்னை இச்சமூகத்தின் மீதான அக்கறையை அதிகரித்துள்ளது. சமுதாயக் கருத்துக்களை சுதந்திரமாக பேச ஜோக்கர் வழிவகுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் கண்டிப்பாக இங்குள்ள ஒவ்வொரு மக்களின் அன்றாட வாழ்வினை ஒன்றியதே. 

பொதுமக்களின் பாதிப்பு, உணர்ச்சிகள், கல்வி அறிவின்மை மற்றும் பேசும் சுதந்திரம் போன்றவை திரையின் மூலம் காட்டுவதால், மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மக்கள் தங்களது வாழ்வாதார பிரச்சனையை இச்சமூகம் கவணிக்கிறது என நம்புகின்றனர். இதன் மூலம் மக்களுக்கும் சமுதாய விழிப்புணர்வும் ஏற்படுகிறது. பத்து வருட காலமாக கூத்து பட்டறையில் நான் நடித்து வரும்போது சமுதாய விழிப்புணர்வில் நான் அக்கறை கொண்டேன். அதனை வெளிக்கொண்டு வருவதற்கு எனக்கு சினிமா வாழ்க்கை பயனுள்ளதாக அமைந்தது.

நாடகத்துறையில் நடிப்பவர்கள் மட்டுமல்லாமல், சினிமா துறையில் நடிப்பவர்களும் முகபாவனைகளுடன் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பினை நடித்து வருகின்றனர். ஆனால், நாடக நடிப்பிற்கும், சினிமா நடிப்பிற்கும் வேறுபாடுகள் உள்ளது. ஒரு நாடகத்தில் நடிக்கும் கலைஞனுக்கு அவனது நடிப்பிற்கு முக்கிய பங்கு உள்ளது. அதுபோல், சினிமாவில் நடிப்பதற்கு படத்தை இயக்கும் இயக்குநரின் பங்கு முக்கியமாக உள்ளது.

இவ்வாறான கதையுடைய படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என எனக்கு எவ்வித வரைமுறையும் இல்லை. ஆனால், எனக்கான ஒரு தனி அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்தது "ஜோக்கர்" தான் என்றார் நடிகர் குரு சோமசுந்தரம்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...