கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிர்புறம் அரசு ஐ.டி.ஐ ரூபாய்.5 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், எலெக்ட்டீரிசியன், ஐ.டி, ஐ.சி.டி.எஸ்.எம் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளும், சி.ஒ.பி.எ, சுவிங் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, டீ.டி.பி.ஒ மற்றும் சி.எச்.என்.எம் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்டுகின்றன. இந்த தொழிற்பயிற்சி மகளிருக்காக மட்டுமே இயங்குவதாகும். பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சிக்கான சிறப்பு கட்டணம் கிடையாது. பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-2645778, 8122047178, 8220022662.