கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. வடக்கு மண்டலம் ஆவராம்பாளையம் தெற்கு 2வது வீதி, மேற்கு மண்டலம் காந்திபார்க் ஏ.கே.எஸ். நகர், தெற்கு மண்டலம் இட்டேரி வீதி, கிழக்கு மண்டலம் கல்லறை வீதி, மத்திய மண்டலம் இராமலிங்கம் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்றது. குறும்படம் திரையிடல், ரங்கோலி போட்டி, மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் விநியோகம் ஆகியவை இடம்பெற்றன. மேலும் 16 பகுதிகளில் தூய்மைப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட ஐந்து வீதிகளில், 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ள 100 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐந்து மண்டலங்களிலும் தலா ஒரு வீதி என தேர்வு செய்யப்பட்டது. வடக்கு மண்டலத்தில் ஆவராம்பாளையம் பகுதியிலுள்ள தெற்கு 2வது வீதியிலும், மேற்கு மண்டலத்தில் காந்திபார்க் பகுதியிலுள்ள ஏ.கே.எஸ். நகரிலும், தெற்கு மண்டலத்தில் இட்டேரி வீதியிலும், கிழக்கு மண்டலத்தில் கல்லறை வீதியிலும், மத்திய மண்டலத்தில் இராமலிங்கம் காலனியிலும் இந்த முகாம்கள் நடைபெற்றன.



முகாமில் பொதுமக்களுக்கு பெரிய திரையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. 'மக்கள் பங்களிப்பைத் தருவோம் டெங்குவை ஒழிப்போம்' என்ற கையெழுத்து பலகையில் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கொசு வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவரும் டெங்கு விழிப்புணர்வு கோலப்போட்டியில் கலந்துகொண்டு வண்ணக் கோலங்கள் வரைந்தனர்.

மூத்த குடிமக்கள் தாமாக முன்வந்து இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு தோறும் விநியோகித்தனர். டெங்கு கதை முற்றம் நிகழ்வின் மூலம் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு டெங்கு தடுப்பு குறித்த கதைகளும் கூறப்பட்டன. இப்பகுதியில் நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சிறப்பாக ரங்கோலி கோலம் வரைந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன.

இதுபோன்ற முகாம்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று ஐந்து மண்டலங்களிலும் 6,959 வீதிகளிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கெடுத்து டெங்குவை ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் மற்றும் விடுதிகளை சுற்றியுள்ள இடங்களில் மாபெரும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு மண்டலத்தில் ஐ.டி.ஐ மற்றும் ஜி.என். மில் வளாகம், தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மத்திய மண்டலத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் விடுதி, மேற்கு மண்டலத்தில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஜி.சி.டி. கல்லூரி வளாகம், கிழக்கு மண்டலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஜி.பிடி. கல்லூரி வளாகம் உள்ளிட்ட 16 பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இந்த தூய்மைப்பணிகள் நடைபெற்றன. தேங்கியுள்ள சாக்லேட் பேப்பர், பிஸ்கட் பாக்கெட் பேப்பர், டீ கப்புகள், பார்சல் உணவு டப்பாக்கள், பயன்பாடற்ற பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை முறையாக அப்புறப்படுத்தப்பட்டன. விடுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை நீர் தேங்க வாய்ப்புள்ள முள்புதர்கள், செடிகள், தேங்கியுள்ள தண்ணீர் அகற்றுதல், கொசுப்புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், கொசுப் புகைமருந்து அடித்தல் மற்றும் லார்வா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...

கோவையில் 10 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை இடையர் வீதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச...