கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும் பார்க் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள் 'SWACHHATA HI SEVA 26' என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்று கழுகு பார்வையில் விழிப்புணர்வு காட்சி படமாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, குப்பைகளை 4 வகையாக பிரித்து கையாளுவது ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கணியூர் இரா. சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கணியூர் ஊராட்சி மற்றும் பார்க் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.



பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது மற்றும் குப்பைகளை 4 வகையாக பிரித்து முறையாக கையாளுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து 'SWACHHATA HI SEVA 26' என்ற எழுத்து வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கழுகு பார்வையில் எடுக்கப்பட்ட இந்த காட்சி, தூய்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைந்தது.



நிகழ்ச்சியில் கணியூர் இரா. சரவணன், தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சத்யா, ஊராட்சி செயலர் ஆர். ஜெகதீசன், ஊராட்சி பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 10 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை இடையர் வீதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச...

இங்கிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு

கோவை காந்திபுரம் புதிய சித்தாபுதூரை சேர்ந்த அரவிந்த்குமார், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் அவர்களது நண்பர் தங்க...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...