10-ஆம் வகுப்பில் 96.42 சதவிகிதம் பேர் கோவையில் தேர்ச்சி


கோவையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 519 பள்ளிகளில் இருந்து 41,649 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இதில், 40,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவர்கள் 20511 பேர் தேர்வு எழுதிய நிலையில் 19447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 21138 பேர் தேர்வெழுதியதில் 20709 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவிகிதமாகவும் உள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டு 95.65 சதவிகிதமாக இருந்தது. 2016-யில் 96.22 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த தேர்ச்சி விகிதம் 0.2 சதவிகிதம் அதிகமாகும். மேலும், 238 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

44 சிறைக் கைதிகள் தேர்ச்சி

கோவை மத்திய சிறை கைதிகள் 49 பேர் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிலையில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...