கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் மாநகரப் பகுதிகளில் 750 சிலைகளும், புறநகர்ப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. 3-வது நாள் மற்றும் 5-வது நாள் சிறப்பு தரிசன வழிபாடுகளுக்குப் பிறகு, பெரும்பாலான சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.
கோவை மாநகர் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாநகரப் பகுதிகளில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் கோவை மாநகரப் பகுதிகளில் மட்டும் 750 விநாயகர் சிலைகளும், புறநகர்ப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன.

3-வது நாள் மற்றும் 5-வது நாள் சிறப்புத் தரிசன வழிபாடுகளுக்குப் பிறகு, பெரும்பாலான சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இன்று கோவை மாநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்திருக்கும் முத்தண்ணன் குளத்திற்கு வரிசையாகக் கொண்டு வரப்பட்டன.

மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைத்து வழிபட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கக் காவல் துறை சார்பில் ஆர்.எஸ்.புரம் மற்றும் முத்தண்ணன் குளத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.