சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற கொண்டாடப்பட்டது. முகாமில் உள்ள சுயம்பு, பாரி உள்ளிட்ட கும்கி யானைகள் அதிகாலையில் நொய்யல் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, திருநீறு, சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. விநாயகர் திருவுருவப்படத்திற்கு பூஜை, தீபாராதனையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கஜ பூஜை நடத்தப்பட்டது. கரும்பு, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, தேங்காய், அரிசி, வெல்லம், சத்து மாவு உருண்டைகள் யானைகளுக்கு ஊட்டப்பட்டன. வனத்துறை அதிகாரிகள், காவலர்கள், பாகன்கள் திரளாக கலந்துகொண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.


Coimbatore: ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்புற கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் இன்று (14.09.2026) விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த முகாமிலும் முகாம் கும்கி யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பழங்கள் மற்றும் சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.



இதனை முன்னிட்டு முகாமில் உள்ள சுயம்பு மற்றும் பாரி உள்ளிட்ட கும்கி யானைகள் அனைத்தும் வனத்துறையினர் மற்றும் பாகன்களால் அதிகாலையிலேயே நொய்யல் ஆற்றில் குளிப்பாட்டி தூய்மைப்படுத்தப்பட்டன. பின்னர் யானைகளின் நெற்றியில் திருநீறு, சந்தனம் மற்றும் குங்குமம் திலகமிட்டு, மாலைகள் அணிவித்து அழகுபடுத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து முகாம் வளாகத்தில் விநாயகர் திருவுருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேவேளையில் முகாம் கும்கி யானைகளுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு கஜ பூஜை (யானைகள் வழிபாடு) நடத்தப்பட்டது.



பூஜை நிறைவு அடைந்ததும், கும்கி யானைகளுக்கு மிகவும் பிடித்தமான கரும்பு, வாழைப்பழம், ஆப்பிள், அன்னாசி, தேங்காய் மற்றும் அரிசி, வெல்லம், சத்து மாவு உருண்டைகள் உள்ளிட்ட சுவையான ஊட்டச்சத்து உணவுகள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாகன்களால் அன்போடு ஊட்டப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் யானைப் பாகன்கள் திரளாக கலந்துகொண்டு சாடிவயல் கும்கி யானைகளுக்கு மரியாதை செலுத்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...