துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அன்னதானம், சிறப்பு அலங்காரங்களுடன் வழிபாடு நடைபெற்றது.


Coimbatore: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் சுற்றுப் பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவில் வடிவிலும், மும்பை லால் பாக் விநாயகர் வடிவிலும், வனத்தில் அருவியின் நடுவில் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் பிரம்மாண்ட செட் அமைத்து விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானம் வழங்கியும், டிரம்ஸ், ஜமாப் இசையுடன், யானை, முயல் போன்ற விலங்குகளின் மாதிரிகளை வைத்து பொதுமக்களை கவர்ந்தும் வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இதில் கோவை ஐடிஐ பகுதியில் எல் இ டி ஸ்கிரீனில் மலர்கள் தூவ, மும்பை லால்பாக் விநாயகரின் மாதிரி சிலையை வைத்து வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர். துடியலூர் பகுதியில் வனப்பகுதியில் அருவிகளின் நடுவில் விநாயகர் அமர்ந்திருப்பது போல அமைத்திருந்தனர்.

ராக்கிபாளையம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து எல் இ டி விளக்குகள் ஜொலிக்க விநாய்கர் சிலை அமைத்திருந்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கோவில் வடிவில் செட் அமைத்து டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, ஆசீர்வாதம் வழங்கும் தத்ரூபமான யானை உருவத்தை அமைத்து பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தனர். அருகில் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.

அதேபோல் என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். அரவான் கோவில் திடல் பகுதியில் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையார், ரங்கம்மாள் காலனி பகுதியில் நீல வண்ணத்தில் அருள்பாளித்த விநாயகர் சிலையுடன், குழந்தைகளை கவர முயல் உருவத்தில் பொம்மைகள் அமைத்திருந்தனர். அருகில் உள்ள வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் ஏ பி எம் நகர், பன்னீர்மடை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்த சிலைகள் அனைத்தும் நாளை மறுநாள் வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள குட்டையில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...