கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், ஒரு பெண் உட்பட வழக்கறிஞர்கள் என இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கிய விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் உட்பட இரு தரப்பினரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர் ஒருவரின் காரின் நான்கு டயர்களிலும் காற்று இறக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வழக்கறிஞர் விசாரித்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவரும் பெண் ஒருவரும் தாங்கள்தான் காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, அந்த வழக்கறிஞர் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சங்க செயலாளர் சுதீஷ், காரின் டயர்களில் காற்றை இறக்கியதாக கூறப்பட்ட இளைஞர் மற்றும் பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அந்தப் பெண் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்தப் பெண்ணும் அவருடன் இருந்த இளைஞரும் வழக்கறிஞர் ஒருவரை தள்ளிவிட்டதாக கூறப்படுவதால், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுதீஷ் அளித்த தகவலின் பேரில், பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...