கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கடித்து விட்டது. அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore: கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலப் பெண்ணை விஷப்பாம்பு கடித்து விட்டதால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சுந்தராபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் பாஸ்வான் (44). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான புதுல் தேவி (30) என்பவரும் அவருடன் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த புதுல் தேவியை திடீரென விஷப்பாம்பு கடித்துவிட்டது. பாம்பு கடித்த அதிர்ச்சியில் புதுல் தேவி பயத்துடன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக உமா சங்கருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விஷப்பாம்பு கடித்ததால் புதுல் தேவியின் உடல்நிலை மோசமாக மாறியது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே புதுல் தேவி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுல் தேவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பாம்புகள் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.