மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாகக் கூறி, பாலக்காடு பிரதான சாலையில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.


Coimbatore: கோவை மாவட்டம் பாலக்காடு சாலை மதுக்கரை பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ACC சிமெண்ட் நிறுவன ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார பொதுமக்கள் இன்று பாலக்காடு பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் பெருமளவில் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.



பிரபல சிமெண்ட் நிறுவனமான ACC சிமெண்ட் ஆலை மதுக்கரை பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளது. ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் அப்பகுதியில் பெருமளவில் காற்று மாசு அடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.



காலையிலிருந்து அதிகளவு புழுதி வெளியேறி குடிநீர் மற்றும் வீடுகளிலும் அதிக அளவிலான சுகாதார கேடு ஏற்படுவதாகவும், பல்வேறு விதமான சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக போராடியும் தீர்வு கிடைக்காததால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பலரிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவில் மட்டுமே ஆய்வு நடத்துவதாகவும், சோதனை நடத்துவதற்கு முன்பாகவே ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துவிட்டு அதிகாரிகள் வருவதாகவும் குற்றம் சாட்டினர்.



இந்நிலையில், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். பல கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...