கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான அன்பாசிரியர் விருதை பெற்றார். மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS அவர்களிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். மாணவர் நலன் மேம்பாட்டுக்கான சிறப்பான பணிகளுக்காக விருது வழங்கப்பட்டது.


Coimbatore: இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான அன்பாசிரியர் விருதை பெற்றுள்ளார். இந்த விருதை 31.08.2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில் சுமார் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் அன்பாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா தேர்வானார்.




மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தசரத்குமார் அவர்களிடமிருந்து, பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் Dr. P. Chandramohan IAS அவர்களின் முன்னிலையில், 29.08.2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்பாசிரியர் விருதை பெற்றுள்ளார்.




விருது பெறுவதற்கான தகுதிகள்




பள்ளி வருகை சதவீதம் அதிகரித்தல், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தல், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றாக செயல்பட்டு மாணவர்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் காணுதல் போன்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டது.




சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை வளங்களை பெருக்குவதற்காக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அதிகமான செடிகள், மரங்கள் நடவு செய்தல், தன்னார்வலர்களின் உதவியுடன் மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான அதிகப்படியான பொருட்களை பெற்றுக் கொடுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.




பாடம் மட்டும் கற்றுக் கொடுக்காமல் பாடம் சார்ந்து கூடுதல் செயல்பாடுகளில் ஈடுபடுதல், மாணவர்களுக்காக நூல்கள் எழுதுதல், மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதற்காக இறகுப்பந்து, கேரம் போன்ற விளையாட்டுகளில் தலைமை ஆசிரியர் முன்னுதாரணமாக இருத்தல் ஆகியவையும் தகுதிகளில் அடங்கும்.




பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள், பெற்றோர் கூட்டங்களை சரியான முறையில் நடத்தி மாணவர் நலனை மேம்படுத்துதல் போன்ற தகுதிகளின் அடிப்படையில் அன்பாசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.




ஆணையாளரின் வாழ்த்து




"இதுபோன்ற பல்வேறு விருதுகளை பெற்று, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பெருமை சேர்த்திட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...