கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேக்கா ஷர்மா பேட்டி

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேக்கா ஷர்மா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கோவையில் தேசிய மகளிர் ஆணையம் சார்பாக "மகிளா ஜன சன்வை" என்ற பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது. இதில் 40 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 90 சதவிகித வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு, அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரு காவல்துறையினர் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கெளரவ கொலை தொடர்பான புகார் அதிகளவுகள் ஹரியானாவில் இருந்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு காவல்துறை முறையாக பதில் அளிப்பது இல்லை.

சாமளாபுரம் மதுக்கடையினை மூடக்கோரி நடைபெற்ற போராட்டதில் பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக இது வரை தங்கள் ஆணையத்திற்கு புகார் வரவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...