சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகளின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது. மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினர் நல விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நலத்திட்ட சலுகைகளை பயன்படுத்தி தகுதியுடைய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...