சூலூர் சிறுமி வழக்கு: சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் சென்று விசாரணை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி கார்த்தியை சம்பவ இடமான கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்து வந்து போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர். மூன்று நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் காவலில் உள்ள முக்கிய குற்றவாளி கார்த்தியை சம்பவம் நடைபெற்ற கண்ணம்பாளையம் குளக்கரை பகுதிக்கு நேரில் அழைத்து வந்து தனிப்படை போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி எவ்வாறு கடத்தப்பட்டார், சம்பவ இடத்திற்கு எப்படி அழைத்து வரப்பட்டார், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை எவ்வாறு நடைபெற்றது, பின்னர் உடல் எங்கு வீசப்பட்டது உள்ளிட்ட விவரங்களை கார்த்தியிடம் இருந்து பெற்று, வீடியோ பதிவுகளுடன் போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

இந்த கள விசாரணை நடைபெற்றதை, சூலூர் DSP கரிகால் பாரி சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறைக்குள் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இந்த விசாரணை நடைபெற்றது.


இதற்கிடையே, வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வழக்கில் தேவையான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விரைவாக திரட்டப்பட்டு வருவதாகவும், இன்னும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் முழுமையான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் நடத்தப்பட்ட கள விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...