கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து இன்று (ஜூன் 3) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக அமைச்சரவையில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளசம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் என அமைச்சரவையில் இருவர்இடம்பெற்றுள்ளனர்.


கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் வகையில் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள், துறை சார்ந்த பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி, மாவட்ட அளவிலான அரசு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை உள்ளடக்கியது. மேலும், கோவை போன்ற முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையமாக விளங்கும் மாவட்டத்திற்கு இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...