கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து மூவரை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான கார்த்திக் மீது கோவை மத்திய சிறையில் சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், மூவரை வேறு சிறைக்கு மாற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கைது செய்யப்பட்ட கார்த்திக், காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது வலது கை மற்றும் காலில் காயமடைந்ததால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கார்த்திக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே, அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை மத்திய சிறை வார்டன் அளித்த புகாரின் பேரில், நந்து என்ற மாற்றுப்பெயரைக் கொண்ட நவீன்குமார், ஜீவா என அழைக்கப்படும் ஜீவானந்தம், மகாவீர் என்ற பெயரில் அறியப்படும் மகாதேவன், கணேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 சிறைக் கைதிகள் மீது பந்தயசாலை காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், முன்னெச்செரிக்கை நோக்கத்திலும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் மூன்று கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நவீன்குமார் வேலூர் மத்திய சிறைக்கும், ஜீவானந்தம் கடலூர் மத்திய சிறைக்கும், மகாதேவன் திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் சிறை நிர்வாகத்தால் பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பந்தயசாலை காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...