கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது. 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதியுடன், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையின் பெருமையான ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனம் தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.2026) திறந்தது.

மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் புதிய கிளையை திறந்து வைத்தார். முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி, ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலசந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ் தாமோதரசாமி மற்றும் எக்ஸிகியூட்டிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிளையில் பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவு, விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிளையின் முதல் விற்பனையை எஸ்கேயம் (SKM) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சிவகுமார் தொடங்கி வைத்தார். அதை அவன்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ். குமரன் பெற்றுக்கொண்டார்.

மேலும், இனிப்பு மற்றும் பேக்கரி பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

100 கார்கள் நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அன்னபூர்ணா குழும ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...