குடிநீர் பிரச்சனைகாக பொதுமக்கள் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத் தட்டுப்பாடு நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன்  இன்று தகவல் தெரிவித்துள்ளார்.  

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்,“கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோயம்புத்தூர் மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குறிச்சிப் பகுதியான ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டருக்கும் பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 இலட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு வருகிறது.

தற்பொழுது,பொள்ளாச்சி பிரதான சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் ஆழியாறு திட்டத்தின் பிரதான குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மேலும், தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர்உந்து நிலையங்களில் மின்தடை ஏற்படுவதாலும், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்படுகிறது.

மேலும், பில்லூர் அணைப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்து சில நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், குறிச்சி பகுதிக்கு குறைவான அளவே குடிநீர் பெறப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களால் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. 

மேலும், பருவமழை பொய்த்துநிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் மேற்கண்ட பகுதிகளில் கிணற்று நீர் விநியோகம் செய்வதிலும் சற்று காலதாமதம் ஏற்படுகிறது, அவ்வப்போது பெறப்படும் புகார்களை சரிசெய்ய உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் விநியோகக் குழாய்கள் அமைத்து கிணற்று நீர் விநியோகம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயற்கையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் சிலர் சாலை மறியல், பேருந்து மறியல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த தவறான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வளவு கடுமையான வறட்சி நிலையிலும் தமிழக அரசின் போர்கால நடவடிக்கைகளால் குனியமுத்தூர், குறிச்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...