“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், பாடலுடன் உரையைத் தொடங்கி, தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்தார்.


Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான - காங்கேயம் தொகுதி மு.பெ. சாமிநாதன், பல்லடம் தொகுதி செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரவி, திருப்பூர் தெற்கு தொகுதி தினேஷ்குமார், அவினாசி (தனி) கோகிலாமணி, தாராபுரம் (தனி) இந்திராணி, உடுமலை ஜெயக்குமார், மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு ஆதரவாக முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று மாலை பாண்டியன் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது உரையாற்றிய அவர், “என்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா… இது பெரியாரின் தமிழ்நாடுடா…” என பாடலுடன் தனது பேச்சைத் தொடங்கி கூட்டத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பை முதலில் எதிர்த்தது. திமுக அரசு தான் என்றும், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார். ஆனால், அதிமுக சட்டமன்றத்திற்குள் ஒரு நிலைப்பாடு, வெளியே மற்றொரு நிலைப்பாடு எடுத்ததாக விமர்சித்தார்.



திராவிட மாடல் ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நொய்யல் ஆறு மேம்பாடு, பரப்புகுளம் கால்வாய் தூர்வாருதல், உயர்மட்டப் பாலங்கள், அரசு மருத்துவமனைகள், விளையாட்டு பூங்கா, மினி டைடல் பார்க் உள்ளிட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் தொழில் நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தொழில் துறையினர் இதை மறக்கமாட்டார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.



மேலும், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். இல்லத்தரசிகளுக்கான புதிய நிதி உதவி திட்டங்களையும் அறிவித்தார்.

பிரதமர் இன்று கோவைக்கு வந்திருப்பதை குறிப்பிட்ட அவர், மகளிர் இடஒதுக்கீடு குறித்து பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், திமுக எப்போதும் பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.



இறுதியாக, மீண்டும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமெனக் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகளை வழங்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் திமுக கொள்கைப் பாடல் ஒலித்தபோது பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என பலரும் உற்சாகமாக நடனமாடினர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...