கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS இன்று (15.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 117 கவுண்டம்பாளையம், 118 கோயம்புத்தூர் வடக்கு, 121 சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.







கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட G.N.Mills கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு P.S.G. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.






வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் 1, வாக்கு பதிவு அலுவலர் 2 மற்றும் வாக்கு பதிவு அலுவலர் 3 ஆகிய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.






தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்காக தபால் வாக்கு செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் செயல்முறைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






இந்த ஆய்வுகளின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) வினோத்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்/தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதுரா, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் விஜயரங்க பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையர்கள் சண்முகம், நர்மதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...