கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் நீர் வரத்து தொடர்கிறது. மார்ச் 31 நிலவரப்படி அணைகளின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் வெளியேற்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் தற்போது 65.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 467 கன அடி நீர் வரத்து உள்ளது. அதே நேரத்தில், அணையில் இருந்து வினாடிக்கு 393 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. இதனால் தற்போது 52.2 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 40 கன அடி நீர் வரத்து இருந்தாலும், அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் தற்போது 3.21 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 37.37 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






அதேபோல், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் தற்போது 42.11 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 195 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மழை நீர் வரத்து தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு தொடர்ந்து நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...