கல்வி மற்றும் மருத்துவ துறையில் எஸ்என்ஆர் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்என்ஆர் டிரஸ்ட் மற்றும் ஜிஇ ஹெல்த்கேர் இணைந்து மருத்துவ தொழில்நுட்ப துறையில் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மருத்துவ துறையில், மருத்துவ பணியாளர்களின் திறன் பற்றாக்குறையை போக்க இது வழி வகுக்கும். இதற்கான அறிவிப்பை, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஆர்.விஜயக்குமார் முன்னிலையில், ஜிஇ ஆப்பிரிக்க இன்டியா, தெற்காசிய பிரிவின் கல்வி மற்றும் தொழில் சேவை பிரிவின் தலைவர் மாருத் செடியா, விப்ரோ ஜிஇ ஹெல்த்கேர் தலைமை செயல் அலுவலர் மந்தீப் குமார் ஆகியோர் வெளியிட்டனர்.



இந்தியாவில், மருத்துவத் துறையில் பயிற்சியும், திறன் மேம்பாடும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்த ஒப்பந்தமானது, மருத்துவ பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதாக இருக்கும். இப்பயிற்சிக்கென ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜிஇ மருத்துவ கல்வி நிறுவனம், ஒரு “அதிநவீன மருத்துவ தூண்டுதல் ஆய்வகம் ஒன்றை வடிவமைத்து, மேம்படுத்தி, கல்வி வகுப்புகளை நடத்த உள்ளது. இதில், கல்வி மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைந்து நடத்தப்படும்.

முதல் கட்டமாக, ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் பயோமெடிக்கல் பிரிவு மாணவர்கள், இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி பயிற்சி பெற உள்ளனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் செவிலியர் மாணவியர், வெளி நாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர் இதில் பங்கேற்று திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஆவரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, புதுடில்லி ஆர்.கே புரம் சம்விகாரில் உள்ள மெடிபாக் ஹல்த்கேர் குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைககளுக்கான இந்த ஒப்பந்தத்தில், புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மூலக்கூறு உயிரியியலில் ஒரு சிறந்த மையத்தை உருவாக்கும் திட்டம். செவிலயர் கல்வியில் பயிற்சியாளர்களை உருவாக்க, மென் திறன், நோயாளிகளை பரிவுணர்வோடு கையாளுதல், கிளினிக்கல் திறன் உள்ளிட்டவைகளை நேரடி செயல் விளக்கத்தில் பயிற்சி அளித்து உருவாக்குதல் போன்றவை இடம் பெறும்.

ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களான ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

கோவையில் தன்னாட்சி உரிமை பெற்றுள்ள ஒரு கல்வி நிறுவனமாக திகழும் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, 1994ல் துவக்கப்பட்டு, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வட்டமலை பாளையத்தில் உள்ள இந்த கல்லூரியில், 9 இளநிலை பட்டப்படிப்பும், 8 முதுநிலை பட்டப்படிப்பும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், முதுநிலை மேலாண்மை நிர்வாகவியில் மற்றும் ஆராய்ச்சி கல்விகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிறுவனமானது, உலக அளவில் சிறந்த 5 பல்கலைக்கழகத்துடன் ஒன்றான, பின்லாந்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஹெல்ஸின்கி பல்கலைக் கழகத்துடன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக 300 பாடப்பிரிவுகளில், உலகில் உள்ள வாழ்விடங்களை மேமம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மேலும், பின்லாந்தில் தொழில் கல்வியில் முன்னோடியாக 24 பல்கலைக்கழகங்கள் இணைந்து லாம்க் எனப்படும், லாட்டி அப்ளைடு சயின்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி அறிவியல், பயோ இன்பர்மேட்டிக்ஸ், எம்பிஏ, இன்ஜினியரிங், வங்கியியல், சர்வதேச சட்டம், சமுதாய அறிவியல், மதவியல், கலை மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்கள் உள்ளன.

இதனுடன், இருதரப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி பகுதிகளில் இணைந்து செயல்படுதல், கல்வி தகவல் பரிமற்றம், கல்வித் தகவல்கள், பாடத்திட்டங்கள், புத்தகங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றம், ஒருங்கிணைந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கல்வி விவாதங்கள் நடத்துதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...