தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வு

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.


Coimbatore: கொல்கத்தாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற எட்டு மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

இந்த தேசிய போட்டிக்கான தகுதி தேர்வு ஈரோடு கரட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் அக்டோபர் 9 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து 120 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர் பங்கேற்றனர்.

தேர்வாகியுள்ள எட்டு மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

1. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரியாஸ்ரீ

2. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரேச்சல்

3. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த சரண் பிரியா

4. ஸ்டேன்ஸ் பள்ளியின் பாகித் அகமத்

5. ஸ்டேன்ஸ் பள்ளியின் ஜாய் ஆன்ட்ரியா

6. அவிலா கான்வென்டைச் சேர்ந்த அக்ஷரா

7. சபர்பன் பள்ளியின் மோனிகா

8. சபர்பன் பள்ளியின் மவுனேஷ்

இந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் சையத் இப்ராஹிம் ஆவார். தேர்வான மாணவர்களையும் பயிற்சியாளரையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அருணா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...