குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக மதுபானக் கடையினை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் மது பாட்டில்களுடன் தரையில் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கோவை ஆவரம்பாளையம் பகுதியில் கோவில் மற்றும் குடியிருப்பு, தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு இருந்த மதுக்கடையை போராட்டம் நடத்தி கடை அப்புறபடுத்திய நிலையில் மீண்டும் அங்கு கடை அமைந்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். மேலும் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.