கிணத்துக்கடவு தொகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 97வது வட்டக் கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டித்தர வேண்டி எம்எல்ஏ செ.தாமோதரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ செ.தாமோதரன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, 94வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன், 94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96வது வட்ட கழக செயலாளர் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO பிரகாஷ், 98வது வட்ட கழக செயலாளர் நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் குமாரசாமி ஆகியோருடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...