திருப்பூரில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்

திருப்பூர் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் படுகாயமடைந்தனர். பல வீடுகள் சேதமடைந்தன.



திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனி பொன்னம்மாள் நகர் பகுதியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கார்த்திக் என்பவரின் வீட்டில், அவரது மைத்துனர் சரவணகுமார் கோவில் திருவிழாக்களுக்கான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து வந்துள்ளார். முறையான அனுமதி பெறாமல், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த பணி நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நாட்டு வெடிமருந்துகள் திடீரென வெடித்து சிதறின. இதில் ஒருவரின் உடல் சிதறி, 100 மீட்டர் தொலைவிற்கு வீசப்பட்டது. கார்த்திக் வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.



அருகிலிருந்த மளிகை கடை ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தது.



எதிர்புறத்தில் இருந்த 20 ஓட்டு வீடுகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.



வெடிக்காத வெடிபொருட்கள் சிதறிக் கிடந்ததால், பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.



இந்த வெடி விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண், 9 மாத குழந்தை ஆலியா செர்ரின், மற்றும் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிக்காத பொருட்கள் மீது தண்ணீர் அடித்து அணைக்குமாறு உத்தரவிட்டனர். உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் கார்த்திக் மற்றும் வெடிபொருட்களை சேகரித்து வைத்திருந்த சரவணகுமார் ஆகிய இருவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் இருந்த 50 கிலோ வெடிப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

வெடி விபத்தின் போது வீட்டிற்குள் சிக்கியிருந்த 4 நாய்களை சுலோச்சனா நாய்கள் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்டு, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...