கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடக்கம்

கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


கோவை: கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோவிலில் தசரா திருவிழா நேற்று காலை 11.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கிய பிறகே இக்கோவிலில் விழா தொடங்கியது.



திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் கொண்டு வந்த மாலைகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, பூசாரி மூலம் கழுத்தில் அணிந்து கொண்டனர். ஞானமூர்த்தீஸ்வரர்-சமேத முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழா தொடங்கியதையொட்டி தசராக்குழுவினர் இந்து, முஸ்லிம், மாரியம்மன், போலீஸ் என பல்வேறு வேடங்கள் அணிந்து கோவை மாநகர பகுதியில் உலா வர ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்யும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...