ஆனைமலையில் நெல் அறுவடை தொடக்கம்: காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை தொடங்கியது. விவசாயிகள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் இன்று தொடங்கின.



சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.



ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் போதுமான அளவு பருவமழை பெய்ததால், வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.



அறுவடைப் பணிகளை தொடங்குவதற்கு முன், விவசாயிகள் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில் உள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, பொங்கல் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் கோபத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. கேரளா மாநிலத்தைப் போல, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

3. நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...