கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை: உயர்நீதிமன்ற குழு நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. பழப்பண்ணையை மூடக்கூடாது என நூற்றக்கணக்கானோர் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை மூடும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது.

கடந்த 1900 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பழப்பண்ணையில் மங்குஸ்தான், துரியன், வாட்டர் ஆப்பிள், முட்டைப் பழம், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல்வகை பழங்கள், மூலிகை செடிகள், மலர் வகைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளுக்கான மரக்கன்றுகளும் இங்கு தயார் செய்யப்பட்டு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



இப்பண்ணை யானை வழித்தடத்தில் அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரதசக்கிரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூன்று வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்தது.

இதன்படி, உயர்நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சி.மோகன், ராகுல் பாலாஜி, சந்தானராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.



அப்போது, மாணவ மாணவிகள், சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என உயர்நீதிமன்ற குழுவினரிடம் மனுக்களை அளித்தனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் குழுவினரை நேரில் சந்தித்து கல்லாறு பழப்பண்ணையின் அவசியம் குறித்தும், 120 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழப்பண்ணையை தற்போது திடீரென யானை வழித்தடம் என கூறுவதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்தார்.

குழுவினர் பண்ணையை முழுவதுமாக ஆய்வு நடத்தினர். ஆவணங்களின் அடிப்படையில் யானைகள் இப்பகுதியில் நடமாடும் இடங்களா என ஆய்வு செய்தனர். அப்போது தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் உடனிருந்து உதவினர்.

ஆய்விற்குப் பின்னர் இது குறித்த விரிவான ஆய்வறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக் குழுவினர் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...