கோவை மேயரின் கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயர் ரங்கநாயகியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும்.


கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்திலிருந்து 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 அன்று ரத்து செய்தது.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருவதாகவும், எந்த ஒரு புதிய திட்டத்தையும் வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் விமர்சித்தார்.

இதனால் இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.

தன்னை சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி, பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 3 அன்று மேயர் பிறப்பித்த உத்தரவை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதன் மூலம் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...