சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கோடை கால காய்கறி கண்காட்சி துவக்கம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை கால விழாவை முன்னிட்டு தோட்டக்கலை சார்பில் ஒன்பதாவது காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசுமுதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இவ்விழாவில், பார்வையாளர்களை கவரும் வண்ணமாக 1500 கிலோ எடையுள்ள பல வண்ணங்களை கொண்ட குட மிளகாய்களை கொண்டு 25 அடி நீளம், 12 அடி உயரம், 6 அடி அகலம் உள்ள காய்கறி கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிலோ எடையுள்ள மஞ்சள் மற்றும் பச்சை சுகினியை கொண்டு 10அடி உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.



மேலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு அரங்கங்கள் அமைப்பட்டு அதில் கரடி, முயல், மான், மயில் போன்ற உருவ அமைப்புகள் காய்கறிகளால் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த காய்கறிக் கண்காட்சியில் சுமார் 25000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இக்காட்சியை கண்டு ரசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...