கோவையில் கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது

கோவை வடவள்ளி போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை வடவள்ளி போலீசார் நேற்று (செப்டம்பர் 30) மேற்கொண்ட ரோந்து பணியின் போது, கஞ்சா விற்பனை செய்த எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடவள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மருதமலை அடிவாரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கல்வீரம்பாளையம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் (24) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், லிங்கனூர் ரோட்டில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்த போலீசார், அவர்களிடம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, வடவள்ளி தென்றல் நகரைச் சேர்ந்த சபரிகிரி (27), தொண்டாமுத்தூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (24), வடவள்ளி காளிதாஸ் நகரைச் சேர்ந்த கோகுல் (27) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மேலும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்தும் மொத்தம் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...