திருப்பூரில் முதல்முறையாக தீபாவளி திருவிழா ஷாப்பிங் எக்ஸ்போ துவக்கம்

திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் பழங்கரை பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க வளாக கட்டிடமான ஐகேஎஃப் (IKF) இல் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடை கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.



திருப்பூரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். பின்னலாடையில் என்றும் சிறப்பம்சங்களுடன் திகழும் திருப்பூரில் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை இந்த கண்காட்சியில் வாங்க முடிகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆடைகள் இந்த கண்காட்சியில் கிடைப்பதும், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். அனைத்து வகையான ஆடைகளும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



முதல் முறையாக திருப்பூரில் நடைபெறும் இந்த நேரடி விற்பனை எக்ஸ்போவில் 50,000 பேருக்கு மேல் வருகை தரவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான ஆடைகளும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...