பொள்ளாச்சியில் செந்தில் பாலாஜி ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமும் நடைபெற்றது.



Coimbatore: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தேர் நிலை திடல் பகுதியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கோஷங்களுடன் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர துணை செயலாளர் தர்மராஜ், நகராட்சி திமுக கவுன்சிலர்கள், நகர திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...