விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் 'உழவர் தின விழா' கண்காட்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்று, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் "உழவர் தின விழா" கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "விவசாயத்திற்கான வேலையாட்கள் குறைந்து கொண்டு வருகிற சூழலில், மூன்றாண்டுகளில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். மேலும், கண்காட்சியில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் கூறினார்.



அமைச்சர் மேலும் கூறுகையில், "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய பயிர் வகைகளும் நவீன தொழில்நுட்பங்களும் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று வெளியிடப்படுகிறது. மண்ணுக்கேற்ற புதிய ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.



இந்த ஆராய்ச்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...