வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி அதிமுக எம்எல்ஏ மனு

கோவை மாவட்டத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் குறித்து, கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ அருண் குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பதவி ஏற்ற நாள் முதல் முறைகேட்டில் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வழக்கை திசை திருப்பும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இன்று (செப்டம்பர் 25) மனு அளித்தார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுகுமார், சேர்மன் கவிதா சண்முகம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...