அதிவேகமாக இயங்கியதாக அதிகாரிகள் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்- அதிருப்தியில் அரசு அதிகாரிகள்

கோவை- பொள்ளாச்சி இடையேயான தேசிய நெடுஞ்சாலை ரூ.414 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறுகலாக இருந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்த காரணத்தினால் இச்சாலையை அகலப்படுத்த வேண்டி  விடுத்தனர். அதன் விளைவாக பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விரிவுபடுத்தப்படும் இச்சாலையால் விபத்துகள் பெருமளவில் குறையும் என்ற மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக தனியார் பேருந்துகள் சாகச பயணங்கள் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 

கடந்த வாரம் நீயா? நானா? என்று போட்டி போட்டுக்கொண்டு தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, அதிவேகமாக இயங்கியதாக 29 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், டி.எஸ்.பி. முத்துராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். 

தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சிலர் பறிமுதல் செய்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, சார் ஆட்சியரிடம் பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்திய பொள்ளாச்சி ஜெயராமன், பேருந்து உரிமையாளர்களுக்கு உறுதியும் அளித்தார்.  

அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற சொன்னதாக கருதிய அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்தனர். பேருந்துகளை விடுவிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...